தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறை குழந்தைகளின் நண்பன் - டிஜிபி சைலேந்திரபாபு

குழந்தைகளுக்கு ஆபத்து நேரிட்டால் உடனடியாக 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

DGP Sylendra Babu
DGP Sylendra Babu

By

Published : Nov 17, 2021, 10:33 PM IST

சென்னை: நாடு முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி வரை குழந்தைகள் பாதுகாப்பு வார விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றைத் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் குழந்தைகளுக்குக் கட்டாய திருமணம் செய்தல், குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல், குழந்தைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், ஆபத்து போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அவசரக் கால உதவி எண் 1098 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.

டிஜிபி சைலேந்திரபாபு

காவல்துறை குழந்தைகளின் நண்பன், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அனைத்து காவல் நிலையத்திலும் பயிற்சி பெற்ற குழந்தைகள் நலக் காவலர் ஒருவர் பணியில் உள்ளனர். இதனால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண்ணை அழைக்கலாம்" என சைலேந்திரபாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க:chennai rain: மக்களே உஷார் - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details