தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக காவல் துறையினருக்கு டிஜிபி அறிவுரை - தமிழ்நாடு டிஜிபி அறிவுரை

போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்தர் பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

POCSO law cases  DGP statement about POCSO law  Tamil Nadu DGP  Sylendra Babu  Tamil Nadu DGP Sylendra Babu  போக்சோ சட்ட வழக்குகள்  தமிழ்நாடு டிஜிபி  போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி  தமிழ்நாடு டிஜிபி அறிவுரை  தமிழ்நாடு காவல்துறை தலைவர்
சைலேந்தர் பாபு

By

Published : Sep 9, 2022, 5:34 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 888 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 31ஆம் தேதி போக்சோ சட்ட வழக்கு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் சில அறிவுரைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்தர் பாபு சுற்றறிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் அனுப்பியுள்ளார்.

அதில், “போக்சோ சட்ட வழக்குகளில் என்ன வகையான குற்றமாக இருந்தாலும் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பிய பின்பு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் அனுப்ப வேண்டும். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்களிடம் நடத்தப்படும் விசாரணைகளை வீடியோவாக பதிவு செய்யக்கூடாது. வீடியோ பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்ற ஆணை இருந்தாலோ அல்லது விசாரணை அதிகாரி முக்கியம் என கருதினால் காவல் துறையை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும்.

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவருடைய குடும்பத்தாரிடம் இடைக்கால நிவாரணத்தை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலே கூறியுள்ள அறிவுரைகள் அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு பின்பற்றப்படாவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...

ABOUT THE AUTHOR

...view details