ஆந்திர மாநிலத்திலுள்ள திருமலை திருப்பதி கோயிலில் தரிசனத்திற்காக வரும் பல்வேறு மாநில பக்தர்களுக்கும் அவரவர் மாநிலத்தின் சார்பாக அங்கு ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தங்கும் இடங்கள் குத்தகைக்கு பெறப்பட்டும், சொந்தமாக நிலம் வாங்கிக் கட்டப்பட்டும் உள்ளதால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாக கோயில் அருகிலேயே தங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
'திருப்பதி கோயிலில் தமிழ்நாடு பக்தர்களுக்காக சொந்தக் கட்டடம்' - உள்ளூர் ஆலோசனைக் குழு! - own building in Tirupati
சென்னை: திருமலை திருப்பதி கோயிலில் தமிழ்நாடு பக்தர்கள் தங்குவதற்காக, சொந்த கட்டடம் கட்டுவது தொடர்பாக அக்கோயிலின் உள்ளூர் ஆலோசனைக் குழு பரிசீலித்து வருகிறது.
ஆனால் திருப்பதி கோயிலில் தமிழ்நாட்டு மக்களுக்கு என சொந்த கட்டடங்கள் ஏதும் இல்லாத நிலையில், அதற்கான ஏற்பாட்டினை தற்போது திருப்பதி கோயிலின் உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவராக உள்ள சென்னையைச் சேர்ந்த சேகர் தரப்பில் அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக சேகர் கூறுகையில், "தமிழ்நாட்டு மக்கள் திருப்பதி கோயிலில் தங்குவதற்கு சொந்தக் கட்டடம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதற்காக கோயில் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவும் வலியுறுத்தியுள்ளோம். அதன்பின்னர் அந்த கோரிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் நடக்க உள்ள போர்டு கலந்தாய்வில் பரிசீலிக்க எங்கள் தரப்பில் தயார் செய்து வருகிறோம். இதன் மூலம் விரைவில் தமிழ்நாட்டிற்கான சொந்த கட்டடம் கட்டும் வாய்ப்பு ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.