சென்னை:வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததாக முன்னதாக தகவல் வெளியானது.
வன்னியர் சமுதாய இடஒதுக்கீடு தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் - வன்னியர் சமுதாய இடஒதுக்கீடு தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்
வன்னியர் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டிற்கு, தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், " வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பறவைக் காய்ச்சல் பதற்றம் வேண்டாம்; முட்டை, கறியை நன்கு சமைத்தால் போதும் - கிரிராஜ் சிங்