சென்னை :தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது.
திருவண்னாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவண்ணாமலை உள்பட மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க :காடு, மலை கடந்து பயணம்... வாழ்வாதாரத்திற்காக அல்ல.. ஜனநாயக கடமையை நிறைவேற்ற!