கரோனா வைரஸினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம், கல்லூரிகளின் பருவத் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர்கல்வித்துறைச் செயலர் அபூர்வா, ”தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதலைச் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடைவடிக்கைகளால் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பருவத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
எனவே பல்கலைக்கழகம், கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை அரசு அறிவித்த உடன் அடுத்த பருவத் தொடக்கத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர், அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், கல்லூரி கல்வி இயக்குனர்கள், தொழில்நுட்பக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.