தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 90 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு! - கோவிட்-19 தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 943 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்து 167ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு  தமிழ்நாடு கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  tamilnadu corona cases  tamilnadu health department bulletin  கோவிட்-19 தமிழ்நாடு  90 thousand corona positive cases
தமிழ்நாட்டில் 90ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

By

Published : Jun 30, 2020, 7:31 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்பாகச் சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள விவரக்குறிப்பில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 3 ஆயிரத்து 943 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்து 167ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சென்னையில் 2 ஆயிரத்து 393 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று 60 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 201ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50 ஆயிரத்து 74 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2 ஆயிரத்து 325 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

  • அரியலூர் - 462
  • செங்கல்பட்டு - 5,419
  • சென்னை- 58,327
  • கோவை - 538
  • கடலூர் - 1,073
  • தர்மபுரி - 81
  • திண்டுக்கல் - 472
  • ஈரோடு - 157
  • கள்ளக்குறிச்சி - 850
  • காஞ்சிபுரம் - 1,977
  • கன்னியாகுமரி - 368
  • கரூர் - 140
  • கிருஷ்ணகிரி - 140
  • மதுரை - 2,557
  • நாகபட்டினம் -254
  • நாமக்கல் - 99
  • நீலகிரி - 89
  • பெரம்பலூர் - 158
  • புதுக்கோட்டை - 174
  • ராமநாதபுரம் - 839
  • ராணிப்பேட்டை - 754
  • சேலம் - 780
  • சிவகங்கை - 241
  • தென்காசி - 347
  • தஞ்சாவூர் - 448
  • தேனி - 702
  • திருப்பத்தூர் - 172
  • திருவள்ளூர் - 3830
  • திருவண்ணாமலை - 1,824
  • திருவாரூர் - 455
  • தூத்துக்குடி - 943
  • திருநெல்வேலி - 796
  • திருப்பூர் - 180
  • திருச்சி - 682
  • வேலூர் - 1,308
  • விழுப்புரம் - 915
  • விருதுநகர் - 493

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 385
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 332
  • ரயில் மூலம் வந்தவர்கள்: 406
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details