சென்னை:தமிழ்நாட்டில் புதிதாக ஐந்தாயிரத்து 692 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக 88 ஆயிரத்து 784 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 679 நபர்களுக்கும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும், பிகாரிலிருந்து வந்த ஐந்து நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், ஆந்திரா, வங்க தேசத்திலிருந்து வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 692 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 66 லட்சத்து எட்டாயிரத்து 675 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து லட்சத்து 63 ஆயிரத்து 661 நபர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில், 46 ஆயிரத்து 405 நபர்கள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் குணமடைந்த ஐந்தாயிரத்து 470 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எட்டாயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் பலனின்றி 66 பேர் மேலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா மொத்த பாதிப்பு:
சென்னை - 1,59,683
செங்கல்பட்டு- 33,626
திருவள்ளூர் - 31065
கோயம்புத்தூர்- 28,388
காஞ்சிபுரம் - 21,204
கடலூர் - 18,972
மதுரை -16,175
சேலம் - 17,692
தேனி - 14,473
விருதுநகர் - 14,176
திருவண்ணாமலை - 14,685
வேலூர் - 14,015
தூத்துக்குடி - 13,110
ராணிப்பேட்டை- 12,970
திருநெல்வேலி- 12,196
கன்னியாகுமரி - 12,138
விழுப்புரம் - 10,876