தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 15,379 பேருக்கு கரோனா உறுதி - Covid update

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று புதிதாக 15 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா உறுதி
கரோனா உறுதி

By

Published : Jan 11, 2022, 8:57 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 379 ஆகப் பதிவாகியுள்ளது. குறிப்பாகச் சென்னையில் ஆறாயிரத்து 484 நபர்களுக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 675 நபர்களுக்கும் திருவள்ளூரில் 893 நபர்களுக்கும் என அதிகளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 658 நபர்களுக்கு கரோனோ வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 15 ஆயிரத்து 330 நபர்களுக்கும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 49 நபர்களுக்கும் எனப் புதிதாக 15 ஆயிரத்து 379 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 237 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனைகள், பெருமைப்படுத்தும் மையங்களில் 75 ஆயிரத்து 83 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 3043 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 686 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 11 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் ஒன்பது நோயாளிகளும் என 20 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 886 உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 35 ஆயிரத்து 833 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். செங்கல்பட்டில் 8,986 பேரும், திருவள்ளூரில் 4,511 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,554 நபர்களும் எனச் சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளை நோயாளிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் உச்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details