மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.20) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 638 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 35 ஆயிரத்து 570 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 நபர்களுக்கும் என 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 53 ஆயிரத்து 645 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 17 லட்சத்து 34ஆயிரத்து 804 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போது மருத்துவமனையில், தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்து 25 ஆயிரத்து 368 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52ஆயிரத்து 283 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் 185 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 212 நோயாளிகளும் என 397 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 131 என உயர்ந்துள்ளது. மேலும் எந்தவித நோய்களும் இல்லாமல் 97 பேர் இறந்தனர்.
சென்னையில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 73 என குறைந்துள்ளது.
ஆனால், பிற மாவட்டங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 4,62,448
செங்கல்பட்டு - 1,22,369
கோயம்புத்தூர் - 1,28,493
திருவள்ளூர் - 88,095
சேலம் - 54,567
காஞ்சிபுரம் - 54,373
மதுரை - 51,881
கடலூர் - 41,148
திருச்சிராப்பள்ளி - 42,651
திருப்பூர் - 42,192
தூத்துக்குடி - 39,658
திருநெல்வேலி - 38,049
வேலூர் - 37,216
தஞ்சாவூர் - 37,231
ஈரோடு - 38,614