தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 427 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 329 என குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா

By

Published : Jun 21, 2021, 8:54 PM IST

மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஜுன்.21) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 829 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 7,424 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 7 ஆயிரத்து 427 நபர்களுக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 5 லட்சத்து 23 ஆயிரத்து 529 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 24 லட்சத்து 29 ஆயிரத்து 924 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 61 ஆயிரத்து 329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 15,281 பேர் மேலும் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 37 ஆயிரத்து 209 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 82 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 107 நோயாளிகளும் என 189 பேர் இறந்தனர். எனவே, இறந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 386 என உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் குறைந்து பதிவாகியுள்ளது . அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 891 நபர்களுக்கும், ஈரோட்டில் 795 நபர்களுக்கும், சேலத்தில் 511 நபர்களுக்கும், திருப்பூரில் 458 நபர்களுக்கும், சென்னையில் 439 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 388 நபர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,29,650

கோயம்புத்தூர் - 2,13,384

செங்கல்பட்டு - 1,54,428

திருவள்ளூர் - 1,09,688

சேலம் - 84,326

திருப்பூர் - 79,182

ஈரோடு - 84,453

மதுரை - 71,443

காஞ்சிபுரம் - 69,434

திருச்சிராப்பள்ளி - 67,390

தஞ்சாவூர் - 61,165

கன்னியாகுமரி - 58,077

கடலூர் - 56,728

தூத்துக்குடி - 53,663

திருநெல்வேலி - 47,116

திருவண்ணாமலை - 47,894

வேலூர் - 46,377

விருதுநகர் - 43,859

தேனி - 41,738

விழுப்புரம் - 41,747

நாமக்கல் - 42,728

ராணிப்பேட்டை - 40,119

கிருஷ்ணகிரி - 38,729

நாகப்பட்டினம் - 37,214

திருவாரூர் - 36,176

திண்டுக்கல் - 31,144

புதுக்கோட்டை - 26,278

திருப்பத்தூர் - 27,187

தென்காசி - 26,279

நீலகிரி - 27,324

கள்ளக்குறிச்சி - 25,990

தர்மபுரி - 23,539

கரூர் - 21,488

ராமநாதபுரம் - 19,358

சிவகங்கை - 16,996

அரியலூர் - 14,292

பெரம்பலூர் - 10,791

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,005

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: நாடு முழுக்க கரோனா தொற்று குறைந்தது!

ABOUT THE AUTHOR

...view details