சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,923 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 22 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 244-ஆக உள்ளது.
தமிழகத்தில் புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா? - tamil nadu health department
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
அதேநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 55 ஆயிரத்து 816-ஆக உள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 38,049-ஆக உள்ளது.
இதையும் படிங்க:செக் மோசடி வழக்கில் சிவாஜி மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்!