சென்னை: சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 832 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,432 பேருக்க புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை நான்கு கோடியே 69, 78,922 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 72, 843 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,519 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 20 ஆயிரத்து 499 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா - மக்கள் நல்வாழ்வு துறை
தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 432 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
![தமிழ்நாட்டில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 432 பேருக்கு கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13280355-874-13280355-1633532951664.jpg)
தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 432 பேருக்கு கரோனா
இதையும் படிங்க : பெட்ரோலுடன் 20 விழுக்காடு எத்தனால் கலக்கப்படும் - இந்தியன் ஆயில்