தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு..! - tamil nadu corona update

தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றை விட குறைவு:தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு..!
நேற்றை விட குறைவு:தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு..!

By

Published : Jun 10, 2022, 6:20 AM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் நேற்று (ஜூன்9)ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 14 ஆயிரத்து 38 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 182 நபர்களுக்கும், அமெரிக்கா கென்யா நாடுகளிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவருக்கும் என 185 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 67 லட்சத்து 44 ஆயிரத்து 812 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் 34 லட்சத்து 56 ஆயிரத்து 697 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஆயிரத்து 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 129 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 17 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை 94, செங்கல்பட்டில் 24 , காஞ்சிபுரத்தில் 19 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நபர்களுக்கும், கோயம்புத்தூர் 9 நபர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் 6 நபர்களுக்கும் தர்மபுரி மதுரை சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கரோனா மூன்றாம் அலை வருவதைத் தடுத்து நிறுத்த முடியாது'

ABOUT THE AUTHOR

...view details