தமிழ்நாட்டில் 8 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு - கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை
By
Published : Dec 14, 2020, 9:07 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 14) புதிதாக ஆயிரத்து 141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள கரோனா குறித்த புள்ளி விவர தகவலில்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 27 லட்சத்து 23 ஆயிரத்து 672 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 39 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் புதிதாக ஆயிரத்து 203 நோயாளிகள் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்து 81ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 8 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என மொத்தம் 18 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 909ஆக அதிகரித்துள்ளது.