தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,893 பேருக்கு கரோனா பாதிப்பு - etv bharat

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,893 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Aug 10, 2021, 9:41 PM IST

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஆக.10) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 225 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 1,893 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 81 லட்சத்து 22 ஆயிரத்து 954 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 1,930 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 22 நோயாளிகளும் என மொத்தம் 27 நோயாளிகள் இறந்துள்ளனர். ஆகவே இறந்தவர்களின் எண்ணிக்கை 34,367 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 209 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 224 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 105 நபர்களுக்கும், ஈரோட்டில் 169 நபர்களுக்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,40,063

கோயம்புத்தூர் - 2,31,633

செங்கல்பட்டு - 1,63,135

திருவள்ளூர் - 1,14,361

சேலம் - 94,242

திருப்பூர் - 88,676

ஈரோடு - 95,399

மதுரை - 73,714

காஞ்சிபுரம் - 72,102

திருச்சிராப்பள்ளி - 73,135

தஞ்சாவூர் - 68,895

கன்னியாகுமரி - 60,421

கடலூர் - 61,144

தூத்துக்குடி - 55,256

திருநெல்வேலி - 48,137

திருவண்ணாமலை - 52,534

வேலூர் - 48,317

விருதுநகர் - 45,618

தேனி - 43,025

விழுப்புரம் - 44,168

நாமக்கல் - 47,734

ராணிப்பேட்டை - 42,147

கிருஷ்ணகிரி - 41,612

திருவாரூர் - 38,287

திண்டுக்கல் - 32,309

புதுக்கோட்டை - 28,494

திருப்பத்தூர் - 28,400

தென்காசி - 26,919

நீலகிரி - 31,005

கள்ளக்குறிச்சி - 29,490

தருமபுரி - 26,390

கரூர் - 22,813

மயிலாடுதுறை - 21,300

ராமநாதபுரம் - 20,104

நாகப்பட்டினம் - 19,039

சிவகங்கை - 19,001

அரியலூர் - 16,016

பெரம்பலூர் - 11,569

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,018

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:பாலிடெக்னிக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details