சென்னை: இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று (ஆக.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 542 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,702 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 95 லட்சத்து 42 ஆயிரத்து 919 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 25 லட்சத்து 95 ஆயிரத்து 935 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 19 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,892 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 41 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 9 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகள் என 29 பேர் இறந்துள்ளனர். ஆகவே இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் நோய்த்தொற்று பரவல் 2.9 விழுக்காடாக உள்ளது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் மிகக்குறைவாக 0.2 விழுக்காடு என்ற அளவில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,42,010
கோயம்புத்தூர் - 2,33,641
செங்கல்பட்டு - 1,64,169
திருவள்ளூர் - 1,15,024
சேலம் - 95,267
திருப்பூர் - 89,451
ஈரோடு - 96,868
மதுரை - 73,848
காஞ்சிபுரம் - 72,421
திருச்சிராப்பள்ளி - 73,722
தஞ்சாவூர் - 69,845
கன்னியாகுமரி - 60,674
கடலூர் - 61,719
தூத்துக்குடி - 55,350
திருநெல்வேலி - 48,284
திருவண்ணாமலை - 52,938
வேலூர் - 48,558
விருதுநகர் - 45,676