சென்னை:கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் அமைக்க 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்தது.
முதலில் 15 கோடியே 84 லட்சம் ரூபாயில் பயிற்சி மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு, பின்னர் சில ஆய்வுகளுக்கு பிறகு 61 கோடியே 80 லட்சம் ரூபாயில் அமைப்பது என திட்டமிடப்பட்டது. மாநில தலைமை கூட்டுறவு வங்கி, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பில் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் அமைப்பது என அறிவிக்கப்பட்டது