தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவராக நீதியரசர் பாரதிதாசன் நியமனம் - chennai news

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தியமைக்கப்பட்டு , புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவராக நீதியரசர் பாரதிதாசன் நியமனம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவராக நீதியரசர் பாரதிதாசன் நியமனம்

By

Published : Nov 17, 2022, 11:04 PM IST

சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரின் தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதியரசர் எம். தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களது பதவி விலகலை ஏற்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் வீ.பாரதிதாசன் அவர்களையும், உறுப்பினர்களாக ச. கருத்தையாபாண்டியன், மு. ஜெயராமன், இரா. சுடலைக்கண்ணன், கே. மேக்ராஜ், முன்னாள் பதிவாளர் மருத்துவர் முனைவர் பெரு. மதியழகன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி. சரவணன், ஆகியோர்களை நியமனம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:4 வழக்குகளில் ஜாமீன்.. சவுக்கு சங்கருக்கு ஹேப்பி நியூஸ்!

ABOUT THE AUTHOR

...view details