அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் முதலில் இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்கா, துபாய் நாடுகளுக்குச் சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். பல்வேறு நிறுனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
முதலமைச்சரின் பயணம் ஓர் பார்வை...
இங்கிலாந்தில் முதலமைச்சர் ஈபிஎஸ்
- 29-8-2019 லண்டனில் செயல்படுத்தப்பட்டுவரும் அவசர ஊர்தி சேவை திட்டத்தை பார்வையிட்டு அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
- 29-8-2019 லண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார்.
- 01-09-2019 லண்டனில் சர்வதேச புகழ்பெற்ற கே.இ.டபிள்யூ. (KEW) தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு, தாவரங்களின் வளர்ப்பு, பராமரிப்பு முறையை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
அமெரிக்காவில் முதலமைச்சர் ஈபிஎஸ்
- 02-09-2019 அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று கால்நடை வளர்ப்பு முறை மற்றும் பண்ணை பராமரிப்பு, மருத்துவம் உள்ளிட்டவை பற்றி அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பண்ணையில் உள்ள பசுக்கன்றுகளுக்கு தீவனம் அளித்து மகிழ்ந்தார். பசுக்கன்றுக்கு தீவனம் ஊட்டிய முதலமைச்சர்
- 02-09-2019 சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள கால்நடைப்பூங்காவில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பஃபல்லோ கால்நடைப்பண்ணை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
- 03-09-2019 அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்க உதவும் 'யாதும் ஊரே' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
- 04-09-2019 நியூயார்க்கில் முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்புவிடுத்தார்.
- 05-9-2019 சான்பிரான்சிஸ்கோ நகரில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை பார்வையிட்டு வாகன உற்பத்தி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை பார்வையிட்ட முதலமைச்சர்
- 05-09-2019 சான்பிரான்சிஸ்கோ நகரில் மாசில்லா எரிசக்தி கூடமான 'ப்ளூம் எனர்ஜி' நிறுவனத்தை பார்வையிட்டு, மின்சார தயாரிப்பு முறையை கேட்டறிந்ததோடு அந்நிறுவன அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நினைவுப்பரிசுகளை முதலமைச்சர் வழங்கினார்.
- 06-09-2019 லாஸ் ஏஞ்சல்ஸ் அனாஹெய்ம் நகரில் கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டு, அதுபோன்று தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர்
துபாயில் முதலமைச்சர் ஈபிஎஸ்
- 09-09-2019 துபாயில் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.