தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களத்தில் உங்களோடு நானும் நிற்பேன்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - களத்தில் உங்களோடு நானும் களத்தில் நிற்பேன்

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் ஆய்வு
முதலமைச்சர் ஆய்வு

By

Published : Nov 27, 2021, 10:47 PM IST

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், "சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள்.

முதலமைச்சர் ட்வீட்

இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!.

அடுத்த சில நாள்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தற்காலிக செவிலியர்களை விடுவிக்காமல் மாற்றுப் பணி வழங்க வலியுறுத்தி மனு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details