சென்னை :ஸ்பீக்கிங் பார் இந்தியா (Speaking for india) தொடரின் முதல் குரல்வழிப் பதிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவில் பல்வேறு கருத்துகளை வீடியோ மூலமாக பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த ஆடியோ சீரிஸ்க்கு "ஸ்பீக்கிங் பார் இந்தியா" (Speaking for india) என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைப்பு வைத்து வெளியிட்டார். இந்நிலையில் ஸ்பீக்கிங் பார் இந்தியா சீரிசின் முதல் ஆடியோ பதிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். குஜராத் மாடல், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய கருத்துகளை அந்த ஆடியோ சீரிசில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
யூடியூப், ஸ்பாடிஃபை, சவுன்ட் கிளவுட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆடியோ சீரிஸ் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பின்னணி குரல் மூலம் முதலமைச்சரின் ஸ்பீக்கிங் பார் இந்தியா சீரிஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :MK Stalin on Twitter Speaking For india : "தெற்கில் இருந்து ஒலிக்கும் குரலுக்காக காத்திருங்கள்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!