தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

MK Stalin: 12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்படுவதாக சென்னையில் நடந்த மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 1, 2023, 9:56 AM IST

Updated : May 1, 2023, 10:33 AM IST

சென்னை: தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால், அந்த மசோதா மீதான சட்ட முன்னெடுப்பை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மே 1 தொழிலாளர் தினமனா இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்துச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திமுகவின் தொ.மு.ச.வை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மே தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், மே தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ஆம் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன். 12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் எதிர்த்தது. இது திமுகவின் ஜனநாயகத் தன்மையை காட்டுகிறது. விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பின்னரும் அவதூறு பரப்புகின்றனர்" என்று அவர் கூறினார். மேலும் இது குறித்து செய்தித் துறை சார்பில் அறிக்கையில் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Iraianbu: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் திட்டங்களை ஆய்வு செய்த தலைமைச்செயலாளர்!

Last Updated : May 1, 2023, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details