சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில், கடல்நீரை குடிநீராகச் சுத்திகரித்து, சென்னையில் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு இந்நிலையில் நெம்மேலியில் இரண்டாவது அலகின் கட்டுமான பணிகள் குறித்து ஸ்டாலின் நேரில் ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் இருந்தனர்.
நெம்மேலி கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையில் ஸ்டாலின் ஆய்வு ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார். 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டாவது அலகு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தென்சென்னை மக்கள் தொகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டு இரண்டாவது அலகு அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: 'மழலையர் பள்ளி திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை'