தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 - எடப்பாடி பழனிசாமி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Edappadi Palanisamy latest announcement
Edappadi Palanisamy latest announcement

By

Published : Jun 16, 2020, 11:34 AM IST


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாடு அரசு, கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்புவோர் விழுக்காடு நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்துவருகிறது.

கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு, இந்தியா முழுவதும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், ஊரடங்கை இம்மாதம் 30ஆம் தேதிவரை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details