சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் +1 வகுப்பு பொதுத்தேர்வில் அரியர்(தேர்ச்சி பெறாத நிலை) வைத்திருந்தாலும், பன்னிரெண்டாம் வகுப்பில் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. அவ்வாறு சேரக்கூடிய மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும்.
இந்த நிலையில் நடப்பாண்டிற்கான பொதுத் தேர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், சில தேர்வுகளுக்கு உரிய தேதிகள் அடுத்தடுத்த தினங்களில் நடத்தப்பட இருக்கின்றது. இதனால் 11-ம் வகுப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திற்கு நடைபெற உள்ள தேர்வுக்கு மட்டுமே தயாராக முடியும்.
மேலும், 11-ம் வகுப்பிற்கு மார்ச் 20-ம் தேதி இயற்பியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் 12-ம் வகுப்பிற்கு அடுத்த நாளான மார்ச் 21-ம் தேதி இயற்பியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. அதேபோன்று மார்ச் 27-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.