தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதை கைவிடுக’ - ஆந்திர முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் - அணை கட்டுவது குறித்து கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றுக்கூறி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Etv Bharat ஆந்திர முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
Etv Bharat ஆந்திர முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

By

Published : Aug 13, 2022, 9:21 PM IST

சென்னை:ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் இன்று எழுதியுள்ளார். அதில், “ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள முக்களகண்டிகை மற்றும் கதரப்பள்ளி கிராமங்களுக்கு அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் ஆற்று நீரை நம்பி வாழும் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே உள்ளவை என்பது தாங்கள் அறிந்ததே.

மாநிலங்களுக்கு இடையேயான நதியாக இருப்பதால், கீழ் கரையோர மாநிலத்தின் அனுமதியின்றி, கொசஸ்தலையாற்றின் குறுக்கே மேல் கரையோர மாநிலம் எந்த புதிய கட்டமைப்பையும் திட்டமிடவோ, ஒப்புதல் அளிக்கவோ, கட்டவோ முடியாது.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியனென்று பெருமிதம் கொள்வோம்

ABOUT THE AUTHOR

...view details