சென்னை: 'முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அந்த அணையிலிருந்து விதிகளின்படி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு ஸ்டாலின் எழுதியிருந்த பதில் கடிதத்தில், 'நேற்று (ஆகஸ்ட் 8) காலை 7.00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138.85 அடியாகவும், சராசரி நீர்வரத்து 6942 கன அடியாகவும், கசிவுநீர் வெளியேற்றம் சுமார் 5000 கன அடியாகவும் உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட விதி வளைவுடன் முழு இணக்கத்துடன் செய்யப்படுகிறது.