தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக வருவாய்த் துறை, காவல் துறையைச் சார்ந்தவர்களுக்குத் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.