தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடு முழுவதும் ஊரடங்கு - முதலமைச்சர் ஆலோசனை - நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தலாம்

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Mar 25, 2020, 12:17 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி இரவு 12 மணி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தலைமைச் செயலர், டிஜிபி, அனைத்து துறை செயலர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த ஏற்கனவே அனைத்து மருத்துவமனைகளிலும் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென்று தனி மருத்துவமனைகள் நான்கு இடங்களில் அமையவுள்ளன. எனவே, இதுகுறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:அவசரப் பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details