சென்னை: இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான 17 வயது நிறைந்த குகேஷ், FIDE உலகக் கோப்பை செஸ் போட்டிகள் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு சுற்றுகளாக குகேஷ் வெற்றி பெற்று முன்னேறியதன் மூலம் 2755.9 புள்ளிகள் பெற்று உலக தரவரிசையில் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். முதல் 10 இடங்களில் குறைந்த வயது உடைய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும், உலக தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை 10வது இடத்திற்குத் தள்ளி, குகேஷ் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதன் மூலம் இந்திய தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்தால், 1986க்கு பிறகு ஆனந்தை உலக தரவரிசையில் முந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.