சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளதாக மருத்துவர்கள் இன்று (நவ.4) தெரிவித்துள்ளனர். மேலும் இக்காய்ச்சல் வைரஸ் காய்ச்சலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு - மு க ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு
MK Stalin viral fever: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு Tamil Nadu Chief Minister M K Stalin has viral fever](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-11-2023/1200-675-19941280-thumbnail-16x9-che.jpg)
Published : Nov 4, 2023, 4:04 PM IST
நேற்று முதலே அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து சிகிச்சை பெற்று, அவர் சில நாட்கள் ஒய்வில் இருக்க வேண்டும் எனவும் மெட்ராஸ் இ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளை மருத்துவர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"தீபாவளியை முன்னிட்டு கூடுதல் நேரம் கடைகளை திறக்கலாம்" - கோவை மாநகர காவல் ஆணையர் அனுமதி!