தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பா.ஜ.கவினர் செய்யும் திசை திருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர்’-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இந்தியா கூட்டணி

TamilNadu CM Stalin: ஒன்றிய பா.ஜ.க. அரசின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர் என தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

c m stalin
மு க ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 4:02 PM IST

சென்னை:திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒரு முக்கியமான கருத்தை நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். அது “பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றித்தான் நாம் அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத் தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சி பேசித் திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது" என்று வீரமணி குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து மிகச் சரியானது. அதனை திராவிட முன்னேற்றக் கழக முன்னணியினரும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளிக்கக் கூடாது.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால் பா.ஜ.க. என்ற கட்சியின் கஜானா மட்டும் அதிகமாக நிரம்பியது. ஊழல்களும், முறைகேடுகளும் மட்டுமே நடந்தன. ரஃபேல் ஊழலும், அதானி முறைகேடுகளும் நடந்தன.

* பாரத்மாலா திட்டம்
* துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம்
* சுங்கச் சாவடி கட்டணங்கள்
* ஆயுஷ்மான் பாரத் திட்டம்
* அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்
* கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்
* எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம்

இந்த ஏழு திட்டங்களிலும் ரூ.7.50 லட்சம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளன, விதிமீறல்கள் நடந்துள்ளன, நிதியைக் கையாள்வதில் மோசடிகள் அரங்கேறியுள்ளன என்பதை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க. நான்கு மாதகாலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதனை அணைக்க முதுகெலும்பு இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.

இதனை எல்லாம் பேசவிடாமல் திசைதிருப்ப பா.ஜ.க. முயற்சிக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து மாநில மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற மக்கள் விரோத ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஒற்றை ஆட்சி என சர்வாதிகாரப் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்வது என்பது உள்ளிட்ட ஆபத்தான முயற்சிகளைப் பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இந்தியா கூட்டணி உருவான பிறகு பா.ஜ.க.வுக்கு நடுக்கம் வந்துவிட்டது.

பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; அவர்களுக்கு முடிவுரை எழுதி இந்தியா கூட்டணியை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க எவ்வித கவனச் சிதறலுக்கும் இடமளிக்காமல் அர்ப்பணிப்போடு சேர்ப்போம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:“நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று பாஜகவை வீட்டுக்கு அனுப்பும்” - உதயநிதி ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details