இதுதொடர்பாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லாலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் அமைந்துள்ள மகேஷ்பூர் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட சுமார் 200 குடும்பங்கள் வசித்துவந்தனர்.
தமிழ் குடும்பங்களுக்கு உதவுங்கள்: ஹரியானா முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் - ஹரியானா தமிழ் குடும்பம்
சென்னை: ஹரியானாவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு உதவி செய்யக்கோரி, அம்மாநில முதலமைச்சர் மனோகர் லாலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy
இந்நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் ஏதும் வழங்காமல், அப்பகுதியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அந்த மக்களுக்கு தேவையானதை செய்து தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”. எனத் தெரிவித்துள்ளார்.