தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மாவட்ட வாரியாக வாக்காளர்கள் முழு விவரம்! - தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை

Tamil nadu Voters list: தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

தமிழக வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு
தமிழக வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 10:25 PM IST

சென்னை:தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று (அக்.27) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண்கள் 3.10 கோடி பேர், ஆண்கள் 3 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 16 பேர் உள்ளனர். மேலும் தமிழகத்தில், அதிகமாக வாக்காளர்கள் இருக்கும் சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்" என்று தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம் (வரைவு)

மாவட்டம் ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்த எண்ணிக்கை
சென்னை 19,01,911 19,65,149 1,118 38,68,178
காஞ்சிபுரம் 6,44,802 6,79,597 182 13,24,581
செங்கல்பட்டு 12,95,171 13,16,924 441 26,12,536
திருவள்ளூர் 16,47,943 16,86,123 720 33,34,786
திருவண்ணாமலை 10,06,658 10,46,842 118 20,53,618
வேலூர் 6,08,639 6,48,515 162 12,57,316
விழுப்புரம் 8,15,967 8,33,657 208 16,49,832
கள்ளக்குறிச்சி 5,46,938 5,42,855 228 10,90,021
திருப்பத்தூர் 4,59,945 4,72,743 118 9,32,806
இராணிப்பேட்டை 4,97,721 5,24,542 91 10,22,354
அரியலூர் 2,53,534 2,53,880 11 5,07,425
மயிலாடுதுறை 3,65,735 3,72,128 20 7,37,883
நாகப்பட்டினம் 2,65,472 2,75,926 24 5,41,422
பெரம்பலூர் 2,76,491 2,86,000 8 5,62,499
புதுக்கோட்டை 6,51,559 6,64,175 64 13,15,798
தஞ்சாவூர் 9,74,896 10,25,988 156 20,01,040
திருச்சிராப்பள்ளி 10,98,759 11,64,081 329 22,63,169
திருவாரூர் 5,06,689 5,29,518 65 10,36,272
தருமபுரி 6,21,822 6,05,319 161 12,27,302
திண்டுக்கல் 8,95,483 9,45,135 213 18,40,831
கோயம்புத்தூர் 14,96,770 15,51,665 569 30,49,004
கரூர் 4,20,313 4,52,043 67 8,72,423
ஈரோடு 9,45,487 10,01,239 160 19,46,886
கிருஷ்ணகிரி 7,96,583 7,88,782 290 15,85,655
நாமக்கல் 6,88,440 7,31,010 193 14,19,643
நீலகிரி 2,74,005 2,96,610 17 5,70,632
சேலம் 14,41,717 14,50,621 271 28,92,609
திருப்பூர் 11,37,321 11,78,455 335 23,16,111
கன்னியாகுமரி 7,61,833 7,60,063 140 15,02,236
மதுரை 12,97,199 13,43,169 233 26,37,601
இராமநாதபுரம் 5,73,462 5,78,771 69 11,52,302
சிவகங்கை 5,73,291 5,93,318 51 11,66,660
தேனி 5,39,512 5,61,903 193 11,01,608
தூத்துக்குடி 6,97,945 7,26,593 210 14,24,748
திருநெல்வேலி 6,69,490 6,99,096 132 13,68,718
தென்காசி 6,38,731 6,64,176 155 13,03,062
விருதுநகர் 7,48,446 7,81,860 230 15,30,536

மேலும் வயது வாரியாக, 40 முதல் 49 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். (1,37,63,488 வாக்காளர்கள்). 18 முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் 3,94,909 பேர்கள் உள்ளனர். 100 வயதை கடந்து இருக்கும் வாக்காளர்கள் 16,300 பேர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தமிழக்த்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 3,00,68,610 பேர்கள், அதேப்போல் பெண் வாக்காளர்கள் 3,10,54,571 பேர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 8016 பேர்கள் என 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளா் பட்டியலில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனதளவில் அன்றே ஓய்வு பெற்றுவிட்டேன்.. 2019 உலகக் கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த தோனி!

ABOUT THE AUTHOR

...view details