தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்ற வேண்டும்' - தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்ற வேண்டும் -விசிக

மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் 7 பேர் விடுதலையை சாத்தியப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்; அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்ற வேண்டும் -விசிக
தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்ற வேண்டும் -விசிக

By

Published : May 21, 2021, 7:18 PM IST

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம்

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சனையில் காட்டியிருக்கும் அக்கறையைப் பாராட்டுகிறோம். ஆனால், அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த விடுதலையை சாத்தியப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

சட்ட விரோதமான நடவடிக்கை

கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் சிபிஐயின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததைக் காரணமாகக் கூறினார். ஆனால், அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்திவந்த ஆளுநர் கடைசியில் குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்கவேண்டும். எனவே அவருக்கு அனுப்பி விட்டேன் என்று கூறிவிட்டார். அப்படி அவர் அனுப்பியிருந்தால், அது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும்.

7 பேர் விடுதலை: மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது

7 பேர் விடுதலை: மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தண்டனை குறைப்புச் செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறது. அது பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல்...

தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்ற வேண்டும் - விசிக

7 பேர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது, அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது.

அந்தத் தவறை சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது. எனவே, 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்கவேண்டும்'' எனக் கேட்டுக்கொள்கிறோம்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details