தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் வருகிற 13ஆம் தேதி காலை 11.15 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.
இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை: கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை
சென்னை: இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் சனிக்கிழமை (பிப்.13) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை
இக்கூட்டத்தில் நிதிநிலையில் இடம்பெற கூடிய புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கமல்ஹாசன் வலியுறுத்தல்!