சென்னை:அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளபடவுள்ளது.
மேலும் கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார்.