தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் - மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு
மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு

By

Published : Aug 13, 2021, 9:42 PM IST

சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு

ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார்.

மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு

2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களை அமைக்க மொத்தம் ரூ.433.97 கோடி, மீன் இறங்கு தளங்களை மேம்படுத்த ரூ.143.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1,149.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details