தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Live Updates: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை உடனுக்குடன் - Tamil Nadu finance minister PTR Palanivel thiyagarajan

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை

By

Published : Mar 18, 2022, 9:14 AM IST

Updated : Mar 18, 2022, 11:53 AM IST

11:53 March 18

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிறைவு செய்தார். இன்றைய பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறி பேரவையை ஒத்திவைத்தார்.

11:51 March 18

வரும் நிதியாண்டில் 500 புதிய மின்சார பேருந்துகள், 2,000க்கும் அதிகமான புதிய டீசல் பேருந்துகள் வாங்கப்படும்

டெல்டாவில் உள்ள 4,964 கிமீ நீலமுள்ள கால்வாய்களை தூர்வார ரூ.80 ஒதுக்கீடு

வட சென்னையில் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்

11:40 March 18

ஆங்கிலத்தில் பட்ஜெட் உரை

தேசிய மற்றும் உலக அளவில் உள்ள தொழில்முனைவோர், செய்தியாளர்களுக்கு அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய தரவுகள் சென்று சேர சில நிமிடங்கள் உரையை ஆங்கிலத்தில் வாசிக்கிறேன் என நிதியமைச்சர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

சபாநாயகர் ஒப்பதல் அளித்த நிலையில், தற்போது நிதியமைச்சர் ஆங்கிலத்தில் நிதிநிலை அறிக்கையை வாசிக்கிறார்.

11:35 March 18

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.19,000 கோடி ஒதுக்கீடு

11:31 March 18

செய்யாறு மற்றும் கும்மிடிப்பூண்டியில் சரக்கு முனையம் அமைக்கப்படும்

கோவை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காக்கள்

சென்னை நந்தம்பாக்கத்தில் மாநில புத்தொழில்(startups) மையம் ஒன்று அமைக்கப்படும்

11:23 March 18

கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.135 கோடி மதிப்பில் ஆறு வழிச்சாலை அமைக்கப்படும்

6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ள மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை

மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்காக போக்குவரத்துதுறைக்கு ரூ.1,520 கோடி மானியம் ஒதுக்கீடு

11:19 March 18

வீடுகளில் குடிநீர் குழாய் அமைக்க ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு

சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இதற்காக ரூ.5,700 கோடி நிதி ஒதுக்கீடு

11:14 March 18

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கும் வகையில் 500 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும்

சென்னை நகரை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

11:10 March 18

விளிம்பு நிலை மக்கள், பழங்குடி மக்களுக்கு 1,000 வீடுகள் கட்டத்தரப்படும்

கால்நடைப் பராமரப்பு திட்டத்திற்கு ரூ.1,315 கோடி

தொன்மையான வழிபாட்டு தலங்களை புணரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு

10:55 March 18

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,949 கோடி

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17, 901 கோடி

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி

பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.7,500 கோடி

ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி

10:53 March 18

அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்

பேராசிரியர் அன்பழகன் பெயரில் அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டம் 5 ஆண்டுகளில் ரூ.7,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும். உலக பல்கலைக்கழகங்களின் கிளைகளை உள்ளடக்கிய அறிவுசார் நகரம் (Knowledge City) ஒன்று தமிழ்நாட்டில் உருவாக்கப்படும்.

10:49 March 18

வரும் நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 38,895 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு.

10:46 March 18

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிர பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நான்கு இலக்கிய விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

10:44 March 18

பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாட்டை சீர் செய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு அது மிக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

10:43 March 18

சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். கிண்டி சிறுவர் பூங்காவை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு. சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.849.20 கோடி ஒதுக்கீடு.

10:40 March 18

சுய உதவிக்குழு, விவசாயக் கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு. வட்டியில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10:39 March 18

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு.

10:32 March 18

அரசு நிலங்களை பரிமாரிக்க ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு. நவீன நுட்பத்தில் நிலங்களை அளவிட புதிய ரோவர்களை வாங்கி ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

10:30 March 18

சென்னை பெருநகரில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில் இந்தாண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

10:28 March 18

விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.10 மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகங்களை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.

10:24 March 18

பெரியாரின் சிந்தனைகளை உலகமெங்கும் சென்று சேர்ந்திட, பெரியார் சிந்தனை தொகுப்பு புத்தகம் 21 உலக மொழிகளில் பதிக்கப்பட்டு, வெளியிடப்படும். இந்த புத்தகம் மின் நூல் வடிவிலும் உருவாக்கப்படும்.

10:21 March 18

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தப்பின் மாநில அரசு கடும் நிதி இழப்பை சந்தித்துவருகிறது. ஜிஎஸ்டி வரி மூலம் தமிழ்நாடு அரசு ரூ.20,000 இழப்பை சந்திக்க நேரிடும்.

10:18 March 18

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையின் கீழ் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு எட்டப்பட்டுள்ளது.

10:15 March 18

உக்ரைன் போர், கோவிட் பெருந்தொற்று தாக்கம், கடன் தள்ளுபடி, மின் பகிர்மான கழக இழப்பு போன்றவையின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு பட்ஜெட்டில் அரசு நிதி முன்னுரிமைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

10:13 March 18

அண்மையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற மாபெரும் வெற்றி, அரசின் நடவடிக்கைக்கு மக்கள் தரும் அங்கீகாரத்தின் பிரதிபலிப்பு என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

10:11 March 18

திமுக அரசின் நடவடிக்கை காரணமாக அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16 விழுக்காட்டிலிருந்து 3.80 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன் மதிப்பீடு ரூ.7 ஆயிரம் கோடியாகும்.

10:09 March 18

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

பட்ஜெட் தாக்கலின்போது அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

10:04 March 18

அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச நேரம் கோரி அவையில் வாக்குவாதம் செய்துவருகிறார். அதிமுக உறுப்பினர்களின் அமளி காரணமாக, பட்ஜெட் உரை சிறிது நேரம் தடைப்பட்டது. சபாநாயகர் அப்பாவு குறுக்கீட்டுக்குப் பின் உரையை நிதியமைச்சர் மீண்டும் வாசிக்கத் தொடங்கியுள்ளார்.

10:02 March 18

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து."

இந்த திருக்குறளுடன் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தொடங்கியுள்ளார். "மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்." இதுவே இக்குறளின் பொருளாகும்.

10:01 March 18

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யத் தொடங்கினார். பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்துவருகிறார்.

09:53 March 18

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உறுப்பினர்கள் தற்போது வருகை தந்துவருகின்றனர்.

09:23 March 18

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின், அவர் தலைமையிலான அரசு முதல்முறையாக முழுமையான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், மின் கட்டண கணக்கீடு முறையில் மாற்றம், புதிய தொழில் திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09:06 March 18

2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணி அளவில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

Last Updated : Mar 18, 2022, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details