சென்னை:திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அதனோடு அவர் வைத்திருக்கும் ரஃபேல் வாட்ச்சிற்கான பில்லையும் வெளியிட்டார். திமுகவினருடைய சொத்து பட்டியலை வெளியிட்டுவதற்கு காரணமாக அமைந்தது இந்த ரஃபேல் வாட்ச் விவகாரம். இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்று மாலைக்குள் அண்ணாமலை ரஃபேல் வாட்ச்சிற்கான பில்லை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ளும் போது பில்லை வெளியிடுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று(ஏப்ரல் 14) ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்ச் வாங்கிய பில்லை வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அண்ணாமலை, "நான் கர்நாடகாவில் ஐபிஎஸ் பணியில் இருந்த போது ரஃபேல் வாட்ச்சை லஞ்சமாக வாங்கியதாக திமுகவினர் என் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இந்தியாவில் ரஃபேல் வாட்ச் இரண்டு பேரிடம்தான் உள்ளது. நான் சாமானிய மனிதனாக அரசியலுக்கு வந்திருக்கிறேன். மாதத்திற்கு 7 முதல் 8 லட்சம் செலவு ஆகிறது. நான் வைத்திருக்கும் கார் என்னுடையது கிடையாது. என்னுடைய உதவியாளர்களுக்கு சம்பளம் என்னுடைய நண்பர்கள் கொடுக்கிறார்கள்.