தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இடைத்தேர்தலை இரட்டை இலையில் அதிமுக எதிர்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை

ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெற பாஜக வலியுறுத்துகிறது எனவும் அது குறித்தான நல்ல முடிவு மாலைக்குள் வெளியாகும் என நம்புவதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Feb 4, 2023, 2:00 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை:தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈபிஎஸ் நிறுத்தியுள்ள வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என ஓபிஎஸ்சிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் ஆலோசனை செய்து கூறுகிறேன் என கூறினார். அதற்குள் அதிமுக தொடர்பான வழக்கில் இடைக்கால தீர்ப்பு வந்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் என இரண்டு தரப்பையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். வலுவான வேட்பாளரை ஆதரிப்பது அரசியலில் முக்கியமானது. ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெற பாஜக வலியுறுத்துகிறது. அதற்கு இன்று(பிப்.04) மாலைக்குள் ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

திமுகவை எதிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுகவின் பொன்னையன் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்றால் மட்டுமே கூடுதல் பலமாக இருக்கும். கூட்டணி கட்சி என்ற முறையில் இருவரும் ஒன்று சேர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அது அவர்களுடைய தொண்டர்கள், தலைவர்கள் முடிவெடுத்துக் கொள்வார்கள். கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுக சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை கொடுப்போம்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2024-ல் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. அதை நோக்கி தான் பாஜக நகர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக தேசிய தலைமை என்னை நியமித்துள்ளது. இது மேலும் என்னுடைய வேலை பழுதை அதிகரிக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details