தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வலதுசாரிகள் நசுக்கப்படுவதற்கு அதிமுக துணைபோகிறது' - பாஜக - தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி

சென்னை: அதிமுக அரசு வலதுசாரி சிந்தனையாளர்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதற்கு துணைபோகிறது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் விமர்சித்துள்ளார்.

Tamil Nadu BJP leader criticizes AIADMK
Tamil Nadu BJP leader criticizes AIADMK

By

Published : Jul 31, 2020, 12:13 AM IST

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரம் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.டி. ராகவன், “நாடாளுமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளன. அரசாணை வேறு, சட்டம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வியாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த புதிய கல்விக் கொள்கை, இரண்டு லட்சம் பேரிடம் கருத்து கேட்டு நிறைவேற்றப்பட்ட ஒன்று. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை ஒன்றும் புதிய விஷயம் இல்லை. பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை திருத்தப்பட்டுள்ளது. இதை வைத்து அரசியல் செய்வது வேதனையளிக்கிறது. தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தேவை இல்லை என்ற வதந்தியைப் பரப்புகிறார்கள். அனுமதி பெற்றுதான் தொழிற்சாலை அமைக்க முடியும்.

பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுக, மீதும் வீரமணி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதா? இவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தமிழ்நாடு அரசு வலதுசாரி சிந்தனையாளர்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதற்கு துணைபோகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details