சென்னை: தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஆடியோ விவகாரம் பாஜகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருச்சி சூர்யா மீது நடவடிக்கை, தற்காலிக நீக்கம் என நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குத் திருச்சி சூர்யா, பாஜகவின் ஒரு சில முக்கிய தலைவர்கள் மீது குற்றம்சாட்டி, நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் இன்று மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும் என கூறப்படுகிறது.