சென்னை: சீனாவின் ஹங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்தியா 107 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்தது. இதில் 28 தங்கப்பதக்கங்களும் அடங்கும். இந்த ஆசியப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சுபா வெங்கடேசன் மற்றும் ராஜேஷ், வெள்ளிப் பதக்கமும், ட்ரிபிள் ஜம்பில் பிரவீன் வெண்கல பதக்கம் வென்றார். இதனையடுத்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ”ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்றது பெறும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற நாடுகளில் சென்று விளையாடுவது ஒரு சிறந்த அனுபவத்தைத் தந்துள்ளது.