தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு! - Tamil nadu election

டெல்லி: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

By

Published : Feb 26, 2021, 8:37 PM IST

தமிழ்நாட்டின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே/ஜூன் மாதங்களுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (பிப். 26) அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 2ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் விவரம்:

வேட்பு மனு தாக்கல்: மார்ச் 12

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20

வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22

வாக்குப்பதிவு: ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை: மே 2

தமிழ்நாடு முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே உடன் இருக்கலாம், இதுவரை வேட்புமனு நேரில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம் என இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களாக அலோக் வரதன், தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்குவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details