தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறு, குறு, நடுத்தர நிறுவனத்துறைக்கு முத்திரைக் கடமையில் இருந்து விலக்கு - தமிழ்நாடு அரசு - TN announces exlusion of stamp duty to mini, micro industry loans

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனத் துறை, வங்கிகள், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கூடுதல் கடன்கள் ஆகியவற்றுக்கு முத்திரைக் கடமையில் இருந்து விலக்கு அளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை செயலகம்
தமிழ்நாடு தலைமை செயலகம்

By

Published : Nov 5, 2020, 10:57 PM IST

சிறு, குறு, நடுத்தர நிறுவனத் துறை, வங்கிகள், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கூடுதல் கடன்கள் ஆகியவற்றுக்கு முத்திரைக் கடமையில் இருந்து விலக்கு அளித்தும், பதிவுக் கட்டணத்தைக் குறைத்தும் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், ஆத்மா நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கூடுதல் கடன்கள் உள்ளிட்டவைக்கு முத்திரைக் கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பதிவுக் கட்டணம் 0.1 விழுக்காடு வரை குறைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details