தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மட்டும் 224 பேர் உயிரிழப்பு!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சென்னையில் மட்டும் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

corona virus
corona virus

By

Published : Jun 8, 2020, 8:54 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 14 ஆயிரத்து 454 பேருக்கு ரத்த மாதிரி, சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இன்று மட்டும் ஆயிரத்து 562 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. இன்று 528 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், மொத்தம் 17 ஆயிரத்து 527 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் இன்று இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை:

வரிசை எண் மாவட்டம் பாதிப்பு
1 சென்னை 23,298
2 செங்கல்பட்டு 1,988
3 திருவள்ளூர் 1,386
4 காஞ்சிபுரம் 534
5 திருவண்ணாமலை 503
6 கடலூர் 491
7 திருநெல்வேலி 390
8 விழுப்புரம் 384
9 அரியலூர் 381
10 தூத்துக்குடி 355
11 மதுரை 317
12 கள்ளக்குறிச்சி 292
13 சேலம் 221
14 திண்டுக்கல் 176
15 கோயம்புத்தூர் 161
16 விருதுநகர் 153
17 பெரம்பலூர் 143
18 ராணிப்பேட்டை 138
19 தேனி 126
20 தஞ்சாவூர் 117
21 திருச்சி 116
22 திருப்பூர் 114
23 ராமநாதபுரம் 112
24 தென்காசி 106
25 கன்னியாகுமரி 94
26 வேலூர் 94
27 கரூர் 87
28 நாமக்கல் 85
29 நாகப்பட்டினம் 81
30 ஈரோடு 75
31 திருவாரூர் 62
32 திருப்பத்தூர் 42
33 சிவகங்கை 42
34 கிருஷ்ணகிரி 37
35 புதுக்கோட்டை 36
36 நீலகிரி 14
37 தருமபுரி 18

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 897 நபர்களில் 1,868 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details