சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் தமிழ் மாநில காங்கிரசின் மாணவர் அணிக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன் பேசுகையில், "அதிமுக கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்துவருகிறோம். விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்து சுமுக முடிவு எடுக்கப்படும். தமாகா போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
’அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் சுமுக முடிவு’ - ஜி.கே. வாசன் - அதிமுக கூட்டணியில் முக்கிய அங்கம் பாமக
சென்னை: 'அதிமுக கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்துவருகிறோம். விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்து சுமுக முடிவு எடுக்கப்படும்' எனத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
![’அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் சுமுக முடிவு’ - ஜி.கே. வாசன் gk vasan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10890528-809-10890528-1614995543427.jpg)
மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன்
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு ஏதுமில்லை. அதிமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக பாமக திகழ்கிறது. திமுக-காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை மக்கள் கவனித்துவருகின்றனர். வாக்குச்சீட்டு மூலம் மக்கள் அவர்களுக்குப் பதில் அளிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ்-இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்