சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிலும், உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அளித்த இடையீட்டு மனு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அனுப்பினார்.
இதனையடுத்து அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஏ மற்றும் பி படிவங்கள் அடங்கிய ஆவணத்தை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்காக தமிழ்மகன் உசேன் நேற்று (பிப்.6) டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்மகன் உசேன், “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சுற்றறிக்கை மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்கின்ற பணியை மேற்கொண்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளரை தேர்வு செய்து, பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்குச் சீட்டு படிவத்தின் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்.